நீலகிரி

நீலகிரி: முதுமலை வனப்பகுதியில் வனத்துறையினருடைய வாகனத்தை விரட்டிய காட்டு யானை

நீலகிரி, முதுமலை வனப்பகுதியில் வனத்துறையினருடைய வாகனத்தை விரட்டிய காட்டு யானை விடியோ வைரலாகி வருகிறது.

DIN

நீலகிரி: நீலகிரி, முதுமலை வனப்பகுதியில் வனத்துறையினருடைய வாகனத்தை விரட்டிய காட்டு யானை விடியோ வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர்  முதுமலை வன பகுதியானது 325 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தப் பகுதியில் சில வாரங்களாக மழை பெய்து வந்த நிலையில் காடுகள் அனைத்தும் பச்சை பசேலென காணப்படுகிறது. தற்போது இந்த பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் வனத்துறையினர் சார்பாக முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினரருடைய வாகனங்கள் மூலம் வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று காடுகள் மற்றும் வனவிலங்குகளை காண்பித்து வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று அவ்வாறு சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற வாகனம் சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த காட்டு யானை வாகனத்தை விரட்டியுள்ளது. 

வாகன ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை பின்புறமாக நகர்த்தி எந்தவித சேதமும் இல்லாமல் வாகனத்தை நிறுத்தி உள்ளார். சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் அந்த வீடியோவை பதிவு செய்துள்ளது சமூக வலைத் தளங்களில் தற்போது இந்த விடியோ வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT