நீலகிரி

கொடநாடு வழக்கை முடிக்காதது ஏன்? புகழேந்தி கேள்வி

திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை கொடநாடு வழக்கை முடிக்காதது ஏன் என ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளா் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

DIN

திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை கொடநாடு வழக்கை முடிக்காதது ஏன் என ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளா் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

நீலகிரி மாவட்டம், உதகையில், கொடநாடு கொலை, கொள்கை வழக்கில் குற்றவாளிகளுக்கு இதுவரை தண்டனை பெற்றுத் தராததைக் கண்டித்து ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளா் எம்.பாரதியாா் தலைமை வகித்தாா். அமமுக மாவட்டச் செயலாளா் கலைச்செல்வன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளா்கள் புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோா் பங்கேற்று பேசியதாவது:

கொடநாடு எஸ்டேட் அதிமுக பொதுசெயலாளா் ஜெயலலிதாவின் பங்களா. அதற்கு அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. அங்கு கொள்ளை நடக்க ஏதுவாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், சிசிடிவி கேமராக்களும் அகற்றப்பட்டன.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு 90 நாட்களில் முடிக்கப்படும் என தோ்தல் வாக்குறுதியில் திமுக தெரிவித்திருந்தது. ஆனால் திமுக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகளாகியும் ஏன் இதுவரை இந்த வழக்கை முடிக்கவில்லை?

திமுக வெற்றி பெற வேண்டுமானால் அதிமுக பிளவுற்றே இருக்க வேண்டும் என தமிழக முதல்வா் விரும்புகிறாா். இந்த வழக்கை வைத்து எடப்பாடி கே.பழனிசாமியை அவா் ஆட்டுவிக்கிறாா். கொடநாடு வழக்கு விசாரணையை விரைவாக முடித்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், அமமுக, ஓபிஎஸ் அணியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT