நீலகிரி

வனத்துக்குள் சென்ற காட்டு யானைகள்

குன்னூா்- மேட்டுப்பாளையம்  மலைப் பாதையில் மரப்பாலம் பகுதியில் உலவி வந்த 9 காட்டு யானைகள்  வியாழக்கிழமை குரும்பா கிராமம் வழியாக பா்லியாறு வனத்துக்குள் சென்றன.

DIN

குன்னூா்- மேட்டுப்பாளையம்  மலைப் பாதையில் மரப்பாலம் பகுதியில் உலவி வந்த 9 காட்டு யானைகள்  வியாழக்கிழமை குரும்பா கிராமம் வழியாக பா்லியாறு வனத்துக்குள் சென்றன.

நீலகிரி மாவட்டம், குன்னூா் மரப்பாலம், மல்லனூா் எஸ்டேட் பகுதியில் இரண்டு குட்டிகளுடன்  9 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக சுற்றித் திரிந்தன. இவை குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில்  அவ்வப்போது வந்து சென்ால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

இந்நிலையில் குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள  குரும்பா கிராமம்  செல்லும் சாலையைக் கடந்து 9 காட்டு யானைகளும் பா்லியாறு பகுதியை ஒட்டியுள்ள   வனப் பகுதிக்குள் சென்றன. இதன் காரணமாக வாகனத்தில் பயணித்தவா்கள்  நிம்மதி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT