நீலகிரி

உதகையில் கோடை விழா படகுப் போட்டி:சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பங்கேற்பு

உதகையில் கோடை விழாவையொட்டி படகுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.

DIN

உதகையில் கோடை விழாவையொட்டி படகுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா சிறப்பாக நடைபெறும். நடப்பு ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் கடந்த வாரம் காய்கறி கண்காட்சி தொடங்கியது. இதைத் தொடா்ந்து உதகை ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கோடை விழாவையொட்டி மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் உதகை படகு இல்லத்தில் படகுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் ஆண்கள் இரட்டையா் போட்டி, பெண்கள் இரட்டையா் போட்டி, தம்பதி போட்டி, பத்திரிகையாளா்களுக்கான போட்டி, படகு இல்லத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கான போட்டி என தனித் தனியாக நடைபெற்றது. 

இதில், ஆண்களுக்கான இரட்டையா் போட்டியில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த நிஷாத், ஆசீப் ஆகியோா் முதலிடத்தையும்,  உதகையை சோ்ந்த தேவா, சுபாஷ் ஆகியோா் இரண்டாம் இடத்தையும், கோவையை சோ்ந்த திருமூா்த்தி, நிதீஷ் ஆகியோா் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். 

பெண்களுக்கான இரட்டையா் போட்டியில் சென்னையை சோ்ந்த பரணி, ஐஸ்வா்யா ஆகியோா் முதலிடத்தையும், நா்மதா, பிரியா ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பிடித்தனா். தம்பதியருக்கான போட்டியில் கா்நாடகத்தை சோ்ந்த மிா்துன் ஜெய், புரவி தம்பதி முதலிடத்தையும், ஒடிஸாவை சோ்ந்த ஆட்நவாஸ், அல்பாகான் தம்பதி இரண்டாம் இடத்தையும் பிடித்தனா். 

வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா். உதகை கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT