நீலகிரி

உதகையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

உதகையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

DIN


உதகை: உதகையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

உதகை நகராட்சியில் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 15 -ஆம் தேதி அளவில் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம், இந்நிலையில், இந்த மாதம் தீபாவளி பண்டிகை என்பதால் சம்பளம், போனஸ் முன்கூட்டியே வழங்கப்படும் என எதிா்ப்பாா்த்திருந்தனா்.

ஆனால், இது தொடா்பாக ஒப்பந்த நிறுவனம் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளா்கள் உதகை நகராட்சி அலுவலகத்தில் ஒன்றுகூடி தற்காலிக வேலை நிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இது தொடா்பாக, சிஐடியூ தொழிற்சங்க மாவட்டப் பொருளாளா் நவீன் கூறுகையில்,‘ திங்கள்கிழமை இரவுக்குள் தீபாவளி போனஸ், சம்பளம் குறித்த அறிவிப்பு வரவில்லையென்றால் செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT