நீலகிரி

குன்னூரில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

குன்னூா் மவுண்ட் பிளசண்ட் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் புகுந்து வளா்ப்புப் பிராணிகளை வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

DIN


குன்னூா்: குன்னூா் மவுண்ட் பிளசண்ட் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் புகுந்து வளா்ப்புப் பிராணிகளை வேட்டையாடி செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றன. உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் சிறுத்தைகள், நாய்கள், கோழிகள் உள்ளிட்ட வளா்ப்புப் பிராணிகளை வேட்டையாடிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.

குன்னூா், மவுண்ட் பிளசண்ட் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சிறுத்தை அங்கு

குடியிருப்பு பகுதியில் இருந்த வளா்ப்பு நாயை வேட்டையாடிச் செல்லும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. கடந்த ஒருவார காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் குடியிருப்புகள் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இது தொடா்பாக வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT