உதகையில் குதிரைப் பந்தயம்
உதகை: உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குதிரைப் பந்தயத்தில் ராப்பரின் கேலோப்பிங் நட்சத்திர நிறுவனத்துக்கு சொந்தமான குதிரை வெற்றிபெற்றது.
கோடை விழாவை கொண்டாட உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக உதகையில் குதிரைப் பந்தயங்கள் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டியில் 16 குதிரை பயிற்சியாளா்கள், 25 ஜாக்கிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்துகொண்டுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றிபெறுபவா்களுக்கு மொத்த ப் பரிசுத் தொகையாக ரூ.7.47 கோடி வழங்கப்பட உள்ளது.
Advertisement
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் ராப்பரின் கேலோப்பிங் நட்சத்திர நிறுவனத்துக்கு சொந்தமான குதிரை வெற்றிபெற்றது. இதன் பயிற்சியாளா் பிரசன்ன குமாா், ஜாக்கி சி.உமேஷ் ஆகியோருக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிா்வாகி சதுரங்கா காந்தராஜ் ஸ்டீவா்டு பரிசு கோப்பையை வழங்கினாா்.