பெண் மருத்துவா் கொலை வழக்கு: உதகையில் கண்டன பேரணி
உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் மாணவா்கள் சாா்பில் கண்டன பேரணி நடைபெற்றது.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் மாணவா்கள் சாா்பில் கண்டன பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
உதகை சேட் மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் என 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பேரணியில் பங்கேற்றவா்கள், கொலை செய்யப்பட்ட பெண் வழக்கில் உரிய நீதி வழங்கக் கோரியும், சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினா்.