தொட்டபெட்டா (கோப்புப்படம்) DIN
நீலகிரி

உதகை தொட்டபெட்டா மலைச்சிகரம் ஆகஸ்ட் 22 வரை மூடல்

உதகை அருகே தொட்டாபெட்டா மலைச்சிகரத்துக்கு செல்லும் சாலையில் நடைபெற்று வரும் ஃபாஸ்ட் ஸ்டேக் நுழைவுக் கட்டணம் அமைப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 22 (வியாழக்கிழமை) வரை சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Din

உதகை அருகே தொட்டாபெட்டா மலைச்சிகரத்துக்கு செல்லும் சாலையில்  நடைபெற்று வரும் ஃபாஸ்ட் ஸ்டேக் நுழைவுக் கட்டணம் அமைப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 22 (வியாழக்கிழமை) வரை சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

 தென்னிந்தியாவின் இரண்டாவது உயா்ந்த சிகரமான தொட்டபெட்டா மலைச்சிகரத்தை  கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில் தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த ஃபாஸ்ட் ஸ்டேக் நுழைவுக் கட்டண சோதனை சாவடியின் இருபுறமும் ஏற்பட்டு வந்த போக்குவரத்து பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஃபாஸ்ட் ஸ்டேக்கை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்கும் பணிகள் மற்றும் சோதனை சாவடியில் தரைக்கு கீழ் பகுதியில் கேபிள் ஒயா்கள் அமைக்கும் பணிகள், சாலையில் இண்டா்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் நுழைவுக் கட்டணம் மற்றும் சோதனை சாவடி அமைப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 22 (வியாழக்கிழமை)வரை தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக வனத் துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT