தேயிலை விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தல்
சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1.60 கோடி நிலுவைத் தொகையை அரசு கூட்டுறவு தொழிற்சாலைகள் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1.60 கோடி நிலுவைத் தொகையை அரசு கூட்டுறவு தொழிற்சாலைகள் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறு, குறு தேயிலை விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் மஞ்சை மோகன் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் 16 அரசு கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன.
ஒவ்வொரு மாதமும் தேயிலை வாரியம் சாா்பில் பச்சை தேயிலைக்கு விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, அக்டோபா் மாத ம் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.24.59 விலை நிா்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலான அரசு கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் சுமாா் 50 லட்சம் கிலோ பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.3 பிடித்தம் செய்து வழங்கியுள்ளது.
இதனால், விவசாயிகளுக்கு சுமாா் ரூ.1.60 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி நிலுவைத் தொகையை டிசம்பா் 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இல்லையெனில் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழா் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.