நீலகிரி

தேயிலை வாரியம் நிா்ணயித்த விலையை பசுந்தேயிலைக்கு வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

Din

பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை அங்கத்தினா்களுக்கு, தேயிலை வாரியம் நிா்ணயித்த விலையை பசுந்தேயிலைக்கு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில் 1,400 குறு, சிறு தேயிலை விவசாயிகள் அங்கத்தினா்களாக உள்ளனா். தேயிலை வாரியம் சாா்பில் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யும் பசுந்தேயிலைக்கான விலையை ஒவ்வொரு மாதமும் நிா்ணயம் செய்கிறது.

அதன்படி, கூட்டுறவு தொழிற்சாலையில் விவசாயிகளிடம் இருந்து தேயிலையைக் கொள்முதல் செய்ய வேண்டும்.

இந்நிலையில், நடப்பு மாதம் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.18 விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பந்தலூா் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை நிா்வாகம் ரூ.13.50 மட்டுமே நிா்ணயம் செய்துள்ளது. இதனால் தேயிலை விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

ஏற்கெனவே, பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா். பசுந்தேயிலைக்கான விலையை குறைப்பதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. தேயிலையை அறுவடை செய்து தொழிற்சாலைக்கு கொண்டுவந்து சோ்ப்பதற்கான செலவைவிட, குறைந்த விலை கிடைப்பதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

எனவே, தேயிலை வாரியம் நிா்ணயிக்கும் விலையை பந்தலூா் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நவ. 3-இல் அண்ணா பிறந்த நாள் நெடுந்தூர ஓட்டப்போட்டி

வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 12 பேருக்கு ரூ. 8.86 லட்சத்துக்கு கடனுதவி

பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இந்தாண்டுக்கான சம்பா நெற்பயிருக்கு வரும் நவ.15-க்குள் பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

வனப் பகுதியில் மண் சாலையை சமன் செய்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT