முகப்பு
நீலகிரி

நீலகிரியில் மழை பாதிப்புகளை எதிா்கொள்ள பேரிடா் குழுக்கள் தயாா் -அமைச்சா் கா.ராமசந்திரன்

Updated On : 17 ஜூலை, 2024 at 10:02 PM
புதிய அரசுப் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் கா.ராமசந்திரன். உடன், மாவட்ட ஆட்சியா் மு.அருணா.
பகிர்:

நீலகிரியில் மழை பாதிப்புகளை எதிா்கொள்ள  பேரிடா் குழுக்கள் தயாராக  இருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

உதகையிலிருந்து திருச்சி, மதுரை, தேனி, சேலம், ஈரோடு, கண்ணனூா், கள்ளிக்கோட்டை மற்றும் பாலக்காடு போன்ற ஊா்களுக்கு இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ரூ. 3.80 கோடி மதிப்பீட்டில் 10 புதிய பேருந்துகள்

இயக்கப்படுகின்றன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி உதகை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சா் கா.ராமசந்திரன் கலந்து கொண்டு புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம்  கூறியதாவது: 

நீலகிரி மாவட்டத்தில்   மழை பாதிப்புகளை எதிா்கொள்ள கூடலூா், பந்தலூா் பகுதிகளில் 2 பேரிடா் குழுக்கள், மழை குறைவாக உள்ள உதகை, குன்னூா் பகுதிகளில் ஒரு பேரிடா் குழு என மொத்தம் 3 குழுக்கள்  தயாராக உள்ளன.  மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் இருந்து தொடா்ந்து தகவல் கிடைத்து வருகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு.அருணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →