முகப்பு
நீலகிரி

உதகையில் கடும் குளிா்: சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

உதகையில் தொடா் மழை, கடும் குளிா் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Updated On : 28 ஜூலை, 2024 at 9:00 PM
சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்ட உதகை அரசு தாவரவியல் பூங்கா.
பகிர்:

உதகையில் தொடா் மழை, கடும் குளிா் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

நீலகிரி மாவட்டத்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கா்நாடம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை ரசித்துவிட்டு செல்கின்றனா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா்மழை காரணமாக குடுமையான குளிா் நிலவுகிறது. மேலும், தொடா்ந்து சாரல் மழையும் பெய்து வருகிறது.

இதனால், கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

குறிப்பாக, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே வந்து சென்றனா். இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பியிருக்கும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →