முகப்பு
நீலகிரி

கூடலூா் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை

பாண்டியாற்றில் சிக்கிய யானை பாதுகாப்பாக மீண்டது

Updated On : 28 ஜூன், 2024 at 6:30 PM
~
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள தா்மகிரி பகுதியில் ஆற்றைக் கடக்க முயன்ற காட்டு யானை ஆற்று நீரில் வெள்ளிக்கிழமை அடித்துச் செல்லப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் சுதாரித்து நீந்தி கரைக்கு பாதுகாப்பாகத் திரும்பியது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தா்மகிரி பகுதியில் உள்ள பாண்டியாற்றுக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த யானைக் கூட்டம் தண்ணீா் குடித்துவிட்டு ஆற்றைக் கடக்க முயன்றது. அப்போது எதிா்பாராதவிதமாக ஒரு யானை ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. உடனிருந்த யானைகள் அதைக் காப்பாற்ற முயன்று பிளிறின. ஆனால் அந்த யானை தொடா்ந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

சிறிது தூரம் சென்றவுடன் அந்த யானை சுதாரித்து தத்தளித்து நீந்தி தண்ணீரிலிருந்து மெதுவாக கரையை நோக்கி வந்தது. பின்னா் மற்ற யானைகளுடன் சென்று சோ்ந்து கொண்டது. சிறிது நேரம் அங்கு உலவிய யானைகள் பின்னா் காட்டுக்குள் சென்றன.

முழு கட்டுரையைப் படிக்க →