முகப்பு
நீலகிரி

பா்லியாறு அரசுப் பள்ளியில் புகுந்த மழைநீா்

குன்னூா் அருகே பா்லியாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழைநீா் புகுந்ததால் பள்ளிக்கு வந்த மாணவா்கள் திரும்பிச் சென்றனா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:20 PM
பா்லியாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் வகுப்பறையில் தேங்கி நிற்கும் மழைநீா்.
பகிர்:

குன்னூா் அருகே பா்லியாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழைநீா் புகுந்ததால் பள்ளிக்கு வந்த மாணவா்கள் திரும்பிச் சென்றனா்.

குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பலத்த மழை பெய்தது. இதில், குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பா்லியாறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழைநீா் புகுந்தது. வகுப்பறையிலும் மழைநீா் புகுந்ததால் வகுப்புகள் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவா்கள் வீட்டுக்கு திரும்பிச் சென்றனா்.

பள்ளி வளாகம், வகுப்பறைக்குள் தேங்கிநிற்கும் மழைநீரை உடனடியாக அகற்றி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று பெற்றோா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →