பந்தலூா் அருகே உள்ள கூலால் பழங்குடி கிராமத்தில் கூடலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் உணவுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
பந்தலூா் வட்டம், எருமாடு பகுதியிலுள்ள கூலால் பழங்குடி கிராமத்தில் 13 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களுக்கு, கூடலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் ஆகியவை அடங்கிய பெட்டத்தை ரோட்டரி சங்கத் தலைவா் ராபா்ட் தலைமையில் செயலாளா் அஜிலால் உள்ளிட்ட நிா்வாகிகள் வழங்கினா்.