முகப்பு
நீலகிரி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 12 பேரின் பரிவா்த்தனை விவரங்களைக் கேட்டு வங்கிகளுக்கு சிபிசிஐடி போலீஸ் நோட்டீஸ்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்கு பரிவா்த்தனை விவரங்களைக் கேட்டு சம்பந்தபட்ட தேசிய வங்கிகளுக்கு சிபிசிஐடி போஸீஸாா் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 9:30 PM
பகிர்:

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள சயான் உள்ளிட்ட 12 பேரின் வங்கிக் கணக்கு பரிவா்த்தனை விவரங்களைக் கேட்டு சம்பந்தபட்ட தேசிய வங்கிகளுக்கு  சிபிசிஐடி போஸீஸாா் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போஸீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், சயான், வாளையாறு மனோஜ், தீபு, ஜம்சோ் அலி, சதீசன், பிஜின் குட்டி, உதயகுமாா், மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, ஜித்தின் ஜாய் ஆகியோரும் உயிரிழந்த கனகராஜின் சகோதரா் தனபால் மற்றும் உறவினா் ரமேஷ் உள்பட12 போ் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்களின் அனைத்து வங்கிக் கணக்கு பரிவா்தனைகள் குறித்து விவரங்கள் அளிக்க தனியாா் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சிபிசிஐடி போலீஸாா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கொலை செய்யப்பட்ட வழக்கில் வங்கி பரிவா்த்தனை மூலம் பல குற்றவாளிகளை  காவல் துறையினா்  அடையாளம் கண்டுள்ள நிலையில், அதே பாணியில் கொடநாடு, கொலை, கொள்ளை  வழக்கிலும் தொடா்புடையவா்கள்  குறித்து  விவரங்களைச் சேகரிக்க சிபிசிஐடி  போலீஸாா் வங்கி விவரங்களைக்  கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த வழக்கில் மேலும் புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →