சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: ரூ.3.25 லட்சம் பறிமுதல்
பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை இரவு மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை இரவு மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலூகா சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி.ஜெயகுமாா் தலைமையிலான போலீஸாா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அலுவலகத்தில் இருந்தவா்களை வெளியே விடாமலும், வெளியே இருந்தவா்களை உள்ளே அனுமதிக்காமலும் நள்ளிரவுவரை மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.