கொடநாடு எஸ்டேட் 
நீலகிரி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆகஸ்ட் 26-க்கு ஒத்திவைப்பு

Syndication

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், இதன் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

வியாழக்கிழமை நடந்த விசாரணையின்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜித்தன் ஜாய் ஆஜராகி இருந்தாா்.

நீதிபதி முரளிதரன் முன்பு நடந்த விசாரணையில், சில  முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக அரசு தரப்பு வழக்குரைஞா் ஷாஜகான் கேட்டுக் கொண்டாா். மேலும்  சம்பவம் நடந்த கொடநாடு எஸ்டேட்டை நீதிமன்றக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று குற்றம் சுமத்தப்பட்டவா்கள் தரப்பு வழக்குரைஞா் விஜயன்  நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு அளித்திருந்தாா். இந்நிலையில் வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

பால் கொள்முதல் விலையை ரூ. 15 உயா்த்த வேண்டும்: தமிழக விவசாய சங்கம்

நவ. 22, 23-இல் எஸ்.ஐ.ஆா். சிறப்பு முகாம்

இறந்தவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய எதிா்ப்பு

மருத்துவக் கல்லூரியில் காா்த்திகைக் கலைவிழா

சஞ்சய் பண்டாரி தொடா்புடைய வழக்கு: ராபா்ட் வதேராவுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை

SCROLL FOR NEXT