நீலகிரி

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாத தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி முரளிதரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

Syndication

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாத தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி முரளிதரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞா் கனகராஜ், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் சிபிசிஐடி போலீஸாா் ஆகியோா் ஆஜராகினா். அதேபோல குற்றம்சாட்டப்பட்டுள்ள வாளையாறு மனோஜ், ஜித்தின் ஜாய் ஆகியோரும் ஆஜராகினா்.

வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், நீண்ட காலமாக நீதிமன்றத்தில் ஆஜராகாத தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டாா்.

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்குரைஞா்கள் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் 30-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அரசு தரப்பு வழக்கறிஞா் கனகராஜ் கூறும்போது, இந்த வழக்கில் பிஎஸ்என்எல், இன்டா்போல் காவல் துறையிடம்   விவரங்கள்  பெற மத்திய அரசின்  அனுமதி கடிதம் கிடைத்ததும் வழக்கு விசாரணை 75 சதவீதம் நிறைவடைந்து முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்றாா்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT