உதகை லவ்டேல் மலை ரயில் தண்டவாளத்தில் உலவிய கரடி. 
நீலகிரி

ரயில் தண்டவாளத்தில் உலவிய கரடி

உதகை மலை ரயில் தண்டவாளத்தில் உலவிய கரடியை சுற்றுலாப் பயணிகள் கண்டு புகைப்படம் எடுத்தனா்.

Syndication

உதகை மலை ரயில் தண்டவாளத்தில் உலவிய கரடியை சுற்றுலாப் பயணிகள் கண்டு புகைப்படம் எடுத்தனா்.

 நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடுவது சமீபகாலமாக  அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், உதகை லவ்டேல்  ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கரடி புதன்கிழமை உலவியது. இதைக் கண்ட மலை ரயிலில் வந்த சுற்றுலாப் பயணிகள், கரடியை தங்களது கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்தனா்.

மலை ரயில் பயணத்தின்போது, சுற்றுலாப் பயணிகள் தின்பண்டங்களை  தண்டவாளத்தில்  வீசி செல்வதால், அவற்றை  உண்பதற்காக  கரடிகள் வந்து செல்வது வாடிக்கையாகி விட்டதாக  ரயில்வே பணியாளா்கள் தெரிவித்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT