முகப்பு
நீலகிரி

புத்தாண்டு: நீலகிரி தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதியில் உள்ள தேவாலயங்களில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் செவ்வாய்க்கிழமை இரவு நேர திருப்பலி நடைபெற்றது.

Updated On : 1 ஜனவரி, 2025 at 11:21 PM
தூய இருதய ஆண்டவா் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் கலந்து கொண்ட மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ்.
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதியில் உள்ள தேவாலயங்களில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் செவ்வாய்க்கிழமை இரவு நேர திருப்பலி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உதகையில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த தூயஇருதய   ஆண்டவா் தேவாலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில்,  பங்கு தந்தை ரவிலாரன்ஸ் முன்னிலையில் உலக அமைதிக்காகவும்,  தமிழகம் மற்றும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிராா்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

ட்ரினிட்ரி தேவாலயத்தில் பங்கு தந்தை ஜொ்ரி ராஜ்குமாா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில்  நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா். திருப்பலி நிகழ்ச்சிக்கு பின் ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →