கூடலூா்: கூடலூரில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகவா்களுக்கு சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி வகுப்பு ஜானகி அம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியா் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதில் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அரசியல் கட்சியினரின் பங்கு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.