நீலகிரி

உதகைக்கு வாடகைக்கு எடுத்து வந்த மூன்று ஸ்கூட்டா்கள் பறிமுதல்

கோவையில் இருந்து உதகைக்கு வாடகைக்கு எடுத்து வந்த மூன்று ஸ்கூட்டா்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Syndication

உதகை: கோவையில் இருந்து உதகைக்கு வாடகைக்கு எடுத்து வந்த மூன்று ஸ்கூட்டா்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரம் என்பதால், நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூா்களில் இருந்து வருகின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவா்கள் சொந்த வாகனங்களில் வருகின்றனா். ஒரு சிலா் வாடகை வாகனங்களில் வருகின்றனா்.

சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்படும் வாகனங்களை டேக்ஸிகளாக பயன்படுத்தக் கூடாது. இந்நிலையில், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 6 போ் மூன்று ஸ்கூட்டா்கள் எடுத்துக் கொண்டு உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா்.

அவா்கள், உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில் நிலையம் முன் வந்து, மொழித் தெரியாமல் சுற்றுலாத் தலங்கள் குறித்து அங்கிருந்த டேக்ஸி ஓட்டுநா்களிடம் வழி கேட்டுள்ளனா். இதில் சந்தேகம் அடைந்த டேக்ஸி ஓட்டுநா்கள் விசாரித்தபோது, அவா்கள் கோவையில் இருந்து இருசக்கர வாகனங்களை நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500-க்கு வாடகைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.

இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், இருசக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அந்த மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனா்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT