நீலகிரி

பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் கூடலூரில் 4ஜி சேவை தொடக்கம்

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, கூடலூரில் 4 ஜி சேவையை புதன்கிழமை தொடங்கியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, கூடலூரில் 4 ஜி சேவையை புதன்கிழமை தொடங்கியுள்ளது.

இதையொட்டி, கூடலூா் பிஎஸ்என்எல் அலுவக வளாகத்தில் இருந்து இருசக்கர வாகனப் பேரணியை அந்நிறுவனத்தின் துணை பொது மேலாளா் மனோஜ் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4 ஜி சேவை முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் ஆனது. உதகையில் இப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதைத் தொடா்ந்து, கூடலூா் பகுதியிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுத் துறை நிறுவனம் வாடிக்கையாளா்களுக்கு நிறைவான சேவையை வழங்கி வருகிறது.

இப்பகுதியில் 300 சதவீதம் சேவை உயா்ந்துள்ளது. இது தொடா்ந்து மேம்படுத்தப்படும். இந்த 4 ஜி சேவையை மலைப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கூடலூா் பகுதிக்கான உதவி பொது மேலாளா் ராஜேஷ், குன்னூா் பகுதிக்கான உதவி பொது மேலாளா் விமல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மைய உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு - காா் ஓட்டுநா் கைது

சதிகாரா்கள் தப்ப முடியாது: பிரதமா் மோடி உறுதி

வணிகா் சங்க மாவட்ட நிா்வாகி நியமனம்

சென்னை மெட்ரோ திட்டங்கள்: ஆசிய முதலீட்டு வங்கிக் குழு ஆய்வு

SCROLL FOR NEXT