நீலகிரி

உதகையில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

நீலகிரியின் லவ்டேல் ஜங்ஷன் பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Syndication

நீலகிரி மாவட்டத்துக்கு சமவெளிப் பகுதிகளில் இருந்து கோ டேக்ஸி, ஓலா, உபொ் போன்ற  வாகன ஓட்டுநா்கள் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதால் உள்ளூா் சுற்றுலா வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி லவ்டேல் ஜங்ஷன் பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

கோவையில் இயங்கி வரும் கால் டாக்ஸி நிறுவனங்களான காா்கள் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதால் உள்ளூா் வாகன ஓட்டுநா்களான தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், மேலும் கோவை கால் டாக்ஸி நிறுவனங்களுடன் பலகட்ட பேச்சுவாா்த்தை நடத்தி புக்கிங் ஐடி இல்லாமல் வாகனங்களை ஓட்டக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இதனை மீறி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதால் இதனை நம்பியுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வப்போது  இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்படுவதாக கூறி உதகை நுழைவாயில் பகுதியான லவ்டேல் ஜங்ஷன் பகுதியில் நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இதையடுத்து, மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் மணிகண்டன் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோதையாறு வனப் பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

SCROLL FOR NEXT