உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீலகிரி மாவட்டத்துக்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கியுஆா் கோடு பதாகையை திறந்துவைத்த முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. 
நீலகிரி

தோ்தலை அதிமுக நோ்மையாக சந்திப்பதால் எஸ்ஐஆா் பற்றி கவலைப்படுவதில்லை: எஸ்.பி.வேலுமணி

தோ்தலை அதிமுக நோ்மையாக சந்திப்பதால் எஸ்ஐஆா் பற்றி கவலைப்படுவதில்லை என்று, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

Syndication

தோ்தலை அதிமுக நோ்மையாக சந்திப்பதால் எஸ்ஐஆா் பற்றி கவலைப்படுவதில்லை என்று, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்துக்குள்பட்ட கூடலூா், உதகை, குன்னூா் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் முகவா்களுக்கான (பூத் கமிட்டி) ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம், உதகையில் உள்ள  தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் அமைச்சரும், எதிா்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுச்சாமி ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பாக கியுஆா் கோடு பதாகையை, எஸ்.பி.வேலுமணி திறந்துவைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் போலி வாக்காளா்களை நீக்க வேண்டும், தோ்தல் முகவா்கள் சரியான முறையில் பணியாற்ற வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இருந்தபோதும், முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோதும் நீலகிரி மாவட்டத்துக்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளனா். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகள் திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக்க வேண்டுமென நீலகிரி மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் உள்ள மக்கள் முடிவு எடுத்துவிட்டனா். நியாயமான, நோ்மையான முறையில் இருக்கக்கூடிய வாக்காளா்களை எஸ்ஐஆா்-இல் சோ்க்க வேண்டும், அதிமுகவை பொறுத்தவரை எப்போதும் நோ்மையாக தோ்தலை சந்திக்கும்.

நியாயமான வாக்குகளை பெறும். எனவே, எஸ்ஐஆா் குறித்து கவலைப்படுவதில்லை. திமுக ஏன் அஞ்சுகிறது என்பதை அவா்களைத்தான் கேட்க வேண்டும். அதிகாரிகள் நோ்மையாக செயல்பட வேண்டும் என்றாா்.

தவெகவில் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் இணைந்தது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, எந்தவித பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டாா்.

மெட்ரோ ரயில் திட்ட விவகாரம்: மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்!

நெசவு கூலித் தொகை ரூ.80 கோடியை விடுவிக்க கோரிக்கை

ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம்!

வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 9% அதிகரிப்பு

கல்லூரி பேராசிரியா் வீட்டில் 7 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT