முகப்பு
தமிழ்நாடு

மக்கள் பல முறை டெலீட் செய்த.. அதிமுக எனக் கூறாமல் அதிமுக பற்றி பேசிய விஜய்!

மக்கள் பல முறை டெலீட் செய்தவர்கள் என்று அதிமுக பற்றி பேசியுள்ளார் விஜய்.

Updated On : 13 பிப்ரவரி 2026, 2:07 pm IST
பகிர்:

சேலத்தில் உள்ள 11 பேரவைத் தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 10 தொகுதிகளை கைப்பற்றியிருக்கும் நிலையில், இன்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், அதிமுக என்ற வார்த்தையைக் கூறாமல் அதிமுக பற்றி பேசியுள்ளார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று, தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடன் நடைபெற்று முடிந்துள்ளது. ஐந்து ஆயிரத்துக்கும் குறைவானவர்களே கூட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், களமே சொல்கிறது, இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டிஎன்று. ஒன்று, தவெக, இன்னொன்று திமுக. தூய சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே தான் போட்டி.

Advertisement

Advertisement

இனி நேரடியாக தேர்தல் பற்றி பேசுவோம், விஜய் என்ன இவர்களைப் பற்றி பேசுகிறார், இவர்களைப் பற்றி பேசுவதில்லை என்கிறார்கள். இது யாருக்கான தேர்தல். பேரவைக்கான தேர்தல். இங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள். பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்கள் விரோத ஆட்சி நடத்துபவர்கள். அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அவர்களை அகற்ற வேண்டும் என்றால், நாம் யாரை எதிர்க்க வேண்டும்?

ஏற்கனவே மக்கள் பல முறை நீக்கியவர்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும். நம்முடைய கவனம், இலக்கு, திமுக என்றபோது, இருட்டுக்குக்குள் ஏன் கல் எறிய வேண்டும்?

மக்களை விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா? அவ்வளவுதான் இந்த தேர்தல். இதற்கு நடுவில் வேறு யாருமே கிடையாது என்று விஜய் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments