ஜன நாயகனுக்காக இரண்டு முறை அழுதேன்: இயக்குநர் ஹெச். வினோத்
இயக்குநர் ஹெ. வினோத் ஜன நாயகன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்...
இயக்குநர் ஹெச். வினோத் ஜன நாயகன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற ஜூலை 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3000 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது.
முன்பதிவிலும் இதுவரை, 5 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதால் முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூலைக் குவிக்கலாம் எனத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ஹெச். வினோத்,"ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் பொங்கல் வெளியீட்டாக வெளியாகாது என தெரிந்தபோதும், அப்படம் முழுமையாக இணைதளங்களில் கசிந்த போதும் இரண்டு முறை அழுதேன். அப்போது, விஜய் சார் அழைத்து, ‘இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். மனதிற்குக் கஷ்டமாக இருக்கும்போது என்னைத் தொடர்புகொள்ளுங்கள்’ என்றார். நீண்ட காலம் கழித்து நான் அழுதது ஜன நாயகன் திரைப்படத்திற்குத்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
Director H. Vinoth has spoken about the film Jana Nayagan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.