FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

முதல்வர் விஜய் வெல்வார் என நினைக்கவில்லை: ஹெச். வினோத்

ஜன நாயகன் குறித்து இயக்குநர் ஹெச். வினோத் பேச்சு...

Updated On : 20 ஜூலை 2026, 3:54 pm IST
முதல்வர் விஜய் , இயக்குநர் ஹெச். வினோத்
பகிர்:

இயக்குநர் ஹெச். வினோத் ஜன நாயகன் திரைப்படம் மற்றும் முதல்வர் விஜய்யின் வெற்றி குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதல்வர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற ஜூலை 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3000 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ஹெச். வினோத், “ஜன நாயகன் திரைப்படம் கசிந்ததற்குப் பின் இப்போது வெளியாகும் வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லை. காரணம், சென்சார் தரப்பிலிருந்தே அதைச் செய்யக் கூடாது எனக் கூறிவிட்டனர். ஆனால், புதிதாகத் தெரிவதற்கான சின்னச் சின்ன விஷயங்கள் இருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரை நிறைய பேர் ஜன நாயகனைப் பார்த்துவிட்டனர். அவர்கள் உறுதியாகத் திரையரங்கம் வருவார்கள் என்பதையும் சொல்ல முடியவில்லை.

Advertisement

Advertisement

ஆனால், என் வேண்டுகோள் என்னவென்றால், இது ஒரு கமர்சியல் திரைப்படமோ இல்லை தவெக கட்சியைப் புகழும் படமோ இல்லை. இப்படம் ஒரு நல்ல அரசியலைப் பேசுகிறது. அதனால், ரசிகர்கள் இப்படத்தை இணையத்தில் பார்த்திருந்தாலும் திரையரங்குகளில் வந்தும் பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். மேலும், இத்திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தது எனக்கு மட்டுமல்ல, விஜய் சார் மற்றும் தயாரிப்பாளருக்கும் கஷ்டமாகவே இருந்தது. ஏனென்றால், விஜய் சார் என்றாலே குழந்தை ரசிகர்கள் அதிகம். அவர்களால் திரையரங்கம் வர முடியாது என்பது வருத்தமானது.

ஜன நாயகன் முழுக்க முழுக்க 200 சதவீதம் விஜய் சார் திரைப்படம்தான். அவர் முதல்வராவார் என நான் நினைக்கவில்லை. நான் மட்டுமல்ல பலரும் அவரைக் குறைவாக மதிப்பிட்டுவிட்டோம். அவர் மக்கள் மீது வைத்திருக்கிற அக்கறையும் மக்கள் இவர் மீது வைத்திருக்கும் அன்பும் இப்போது பிரம்மாண்டமாகத் தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

Director H. Vinoth has spoken about the movie Jana Nayagan and the success of Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments