FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்

கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய் என்ற கேள்விக்கு அமைச்சர் வினோத் அளித்த பதில் பள்ளி..

4 செப்டம்பர் 2026, 1:20 pm IST
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்த முதல்வர் விஜய்.. - கோப்புப் படம் - DIPR
பகிர்:

கல்லணை திறப்பில் முதல்வர் கலந்து கொள்வாரா என்பது குறித்து தலைமைச் செயலகம்தான் அறிவிக்கும் என வேளாண்மை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காவிரி ஆற்றில் மண்டியுள்ள நெய்வேலி காட்டாமணக்கு செடிகள், கோரை புற்கள், ஆகியவற்றை அகற்றும் பணியினை வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று துவக்கி வைத்தார்.

கும்பகோணம் கீழ கோட்டையூர் என்ற இடத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த பணிகள் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், கல்லணை திறப்பதற்கு முதல்வர் வருவாரா? என கேட்டதற்கு தலைமை அலுவலகம் இது பற்றி தெரிவிக்கும் என தெரிவித்தார்.

மேலும் கும்பகோணம் நகரில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என்றும் - இதற்காக இந்த வாய்க்கால்களில் கழிவுநீர் சேருவதை அடைக்கும் பணி விரைவில் துவங்கும். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் நகரில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என அமைச்சர் வினோத் தெரிவித்தார்.

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை இரவு கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வரும் ஆறாம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்திற்கு கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Is CM Vijay inaugurating the Kallanai Dam? Minister Vinoth reply

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments