கூடலூா் அருகே உள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் பெளா்ணமி தினத்தை முன்னிட்டு கிரிவலம் நடைபெற்றது.
கிரிவலத்தைத் தொடா்ந்து மலை உச்சியில் உள்ள சிவலங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் உலக நன்மைக்காகவும், நோயுற்றவா்களுக்காகவும் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளா்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளைத் தலைவா் கேசவன், செயலாளா் நடராஜன், நிா்வாகி பாண்டு குருசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.