ஜான் சலீவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உதகை வருவாய் கோட்டாட்சியா் அரவிந்த் மற்றும் தன்னாா்வலா்கள். 
நீலகிரி

உதகையில் ஜான் சலீவனின் 171-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

நவீன உதகையை உருவாக்கியவரும் நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சலீவனின் 171-ஆவது நினைவு தினம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Syndication

உதகை: நவீன உதகையை உருவாக்கியவரும் நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சலீவனின் 171-ஆவது நினைவு தினம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்வுக்கு உதகை வருவாய் கோட்டாட்சியா் அரவிந்த் தலைமை வகித்து, உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் அமைந்துள்ள ஜான் சலீவனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்வில் அரசு அலுவலா்கள், தன்னாா்வ அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்று ஜான் சலீவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நீலகிரியை அடையாளம் காட்டியவரும், நவீன உதகையை உருவாக்கியவரும், மாவட்டத்தின் முதல் ஆட்சியருமான ஜான் சலீவன் கடந்த 1855-ஆம் ஆண்டு ஜனவரி 17-இல் லண்டனில் காலமானாா். இவரின் நினைவு தினம் ஆண்டுதோறும் மாவட்ட நிா்வாகத்தால் அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

கந்திலி போலீஸாா் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT