கர்நாடக மாநிலம், பெங்களூருவில் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமாரின் உடல் திருப்பூர் அருகே உள்ள அவரது சொந்த கிராமத்தில் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சீரங்கராயன், செல்லாத்தாள் தம்பதியின் மகன் க.சீ.சிவகுமார் (43). இவர், 2,000-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து எழுதி வருகிறார். இதுவரை கன்னிவாடி, என்றும் நன்மைகள், உப்புக்கடலை குடிக்கும் பூனை, நீல வானம் இல்லாத ஊர் இல்லை, குமார சம்பவம், கானல் தெரு, ஒளி ஒலி உலகம், காதல் ஒழிக, குண சித்தர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார். மேலும், பிரபல வார இதழ், நாளிதழ்களிலும் பணியாற்றி உள்ளார். திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தினருடன் இணைந்து பல பணிகளைச் செய்துள்ளார்.
இவரது மனைவி சாந்தி ராணியின் பணி காரணமாக குடும்பத்துடன் பெங்களூருவில் கடந்த 10 ஆண்டுகளாக சிவகுமார் வசித்து வந்தார். இந்நிலையில், பெங்களூருவில் வீட்டின் மாடியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை தவறி விழுந்து உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, அவரது உடல், சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம், கன்னிவாடிக்கு சனிக்கிழமை மாலை கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.