திருப்பூர்

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

DIN

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்புக் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
   உடுமலை நகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.  இதன்படி,  நகராட்சி அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வுகள் பணிகளை மேற்கொண்டனர். கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் தலைமையில் நகராட்சி ஆணையாளர் க.சரவணக்குமார் முன்னிலையில் வேல்ஸ் செவிலியர் கல்லூரி மாணவிகள், வி.ஜி.ராவ் குடியிருப்புப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளில் ஈடுபட்டனர்.
 வீடுகளில் உள்ள தண்ணீர்த் தொட்டிகளில் அபேட் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயமும் வழங்கப்பட்டது. நகரமைப்பு அலுவலர்(பொறுப்பு) வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் சிவகுமார், குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT