திருப்பூர்

கண்டன ஆர்ப்பாட்டம்

அருந்ததிய இளைஞர்களைத் தாக்கியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி உடுமலையில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

அருந்ததிய இளைஞர்களைத் தாக்கியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி உடுமலையில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஊராட்சி முன்னாள் தலைவர் பி.முருகன் முன்னிலை வகித்தார்.
இதில், குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைக்கிணறு கிராமத்தில் அருந்ததிய இளைஞர்களைத் தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கா.சு.நாகராசன் தலைமை வகித்துப் பேசினார்.  கருப்புசாமி (தமிழ்நாடு தென்னைத் தொழிலாளர் பேரவை), வெ.ரங்கநாதன் (விவசாயத் தொழிலாளர் சங்கம்), ஆ.பஞ்சலிங்கம் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), பெரியார்தாசன் (ஆதித் தமிழர் பேரவை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT