திருப்பூர்

தெக்கலூரில் ஆழ்துளைக் கிணறு அமைப்பு

DIN

அவிநாசி அருகே தெக்கலூர் காந்தி நகரில் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்கும் நடவடிக்கையாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
 அவிநாசி ஊராட்சி ஒன்றியம், தெக்கலூர் காந்தி நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் கடந்த 4 மாதங்களாக குடிநீர்ப் பற்றாக்குறையால் அவதிக்குள்ளாகி வந்தனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் மனுக் கொடுத்தம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கடந்த வாரம் சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபாலை முற்றுகையிட்டு, குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
 இதையடுத்து, சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவின்பேரில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதையடுத்து, அப்பகுதியில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT