திருப்பூர்

குடிநீர் கோரி குப்பாண்டம்பாளையத்தில் சாலை மறியல்

DIN

அவிநாசியை அடுத்த குப்பாண்டம்பாளையத்தில் குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குப்பாண்டம்பாளையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஆழ்துளைக் கிணற்று நீர் விநியோகிக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் குப்பாண்டம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்பகுதிக்கு ஆற்றுக் குடிநீர் போதுமான அளவு கிடைப்பதிலலை. அதிலும், தற்போது பழங்கரை முதல் கல்லுமடைக்குட்டை வரை சாலை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் ஆழ்துளைக் கிணற்று நீரின் பிரதானக் குழாய் அடிக்கடி சேதமடைகிறது.
இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன் பிரதான குடிநீர்க் குழாய் உடைந்ததால் இப்பகுதிக்கு நீர் கிடைப்பதில்லை. இதை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். மேலும், இச்சாலைப் பணியை விரைவில் முடிக்க வேண்டும்' என்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடனடியாக பிரதானக் குழாய் சீரமைக்கப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT