திருப்பூர்

கூலி உயர்வை முழுமையாக அமல்படுத்த விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல்

DIN

கூலி உயர்வை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று திருப்பூர்,கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் பல்லடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு,  மாவட்டத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். பாலாஜி வரவேற்றார். இதில் அவிநாசி, தெக்கலூர்,  63வேலம்பாளையம், மங்கலம், கண்ணம்பாளையம் பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில்,  2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின்படி விசைத்தறியாளர்களுக்கு வழங்கவேண்டிய கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் முழுமையாக இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு விசைத்தறியாளர்களுக்கான கூலி உயர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜவுளித் தொழில் துறை அமைச்சர், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT