திருப்பூர்

மனைகள் வரன்முறை குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மனைகள் வரன்முறை குறித்த கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறை செய்வது தொடர்பாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் வாசு தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் சேலம் நகர் ஊரமைப்புத் துறைப் பொறியாளர் யமுனாதேவி கலந்துகொண்டு தமிழக அரசின் புதிய மனைகள் வரன்முறைச் சட்டம் குறித்தும்,  அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல், பேரூராட்சி விதிகள் குறித்தும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், பேரூராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT