கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு
உடுமலை அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலை அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
உடுமலை வட்டம், சாளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன். இவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு அருகில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக விழுந்து விட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் உடுமலையில் இருந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் பல மணி நேரம் போராடிப் பசுவை உயிருடன் மீட்டனர்.