முகப்பு
திருப்பூர்

9 கிராமங்களில் நாளை வருவாய் திட்ட முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் கிராமங்களில் "மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம்' பிப்ரவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வருவாய் கிராமங்களில் "மக்களைத் தேடி வருவாய்த் திட்ட முகாம்' பிப்ரவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
திருப்பூர் வடக்கு தாலுகா- மண்ணரை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், திருப்பூர் தெற்கு தாலுகா -இடுவாய் சின்னம்மன் திருமண மண்டபம், அவிநாசி தாலுகா-ஆலத்தூர் இ-சேவை மையம்,  ஊத்துக்குளி தாலுகா- வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், பல்லடம் தாலுகா- கணபதிபாளையம் தொடங்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், தாராபுரம் தாலுகா- நந்தவனம்பாளையம் இ-சேவை மையம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
அதேபோல,  காங்கயம் தாலுகா- பழைய கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், உடுமலை தாலுகா- பெரிய வாளவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், மடத்துக்குளம் தாலுகா- தாந்தோணி ஊராட்சி வளாக இ-சேவை மையம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் அந்தந்த கிராம மக்கள், தங்களது கோரிக்கைகளை மனுவாகத் தெரிவித்து தீர்வு பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →