மாடு மீது பைக் மோதல்: விவசாயி சாவு
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே புதன்கிழமை, மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
திருப்பூர்மாடு மீது பைக் மோதல்: விவசாயி சாவு
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே புதன்கிழமை, மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் அருகே புதன்கிழமை, மாட்டின் மீது பைக் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகிலுள்ள சூரிப்பாளியைச் சேர்ந்தவர் பழனிசாமி (52), விவசாயி. இவருடைய நண்பர் மூலனூர், மார்க்கம்பட்டி முத்தான் (42), டிராக்டர் டிரைவர்.
இவர்கள் இருவரும் வெள்ளக்கோவில் நாட்டராய சுவாமி கோயிலுக்கு வந்து விட்டு பைக்கில் மூலனூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, புதுப்பை நால்ரோடு அருகே சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென சாலையின் குறுக்கே புகுந்தது.
மாட்டின் மீது பைக் மோதியதில் பைக்கை ஓட்டி வந்த பழனிசாமி கீழே விழுந்து காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்தான் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மூலனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.