முகப்பு
திருப்பூர்

கார் மோதி தூக்கி வீசப்பட்ட தம்பதி லாரி சக்கரத்தில் சிக்கி சாவு

காங்கயம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில்  சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். 

Updated On : 9 ஜூலை, 2018 at 7:31 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

காங்கயம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில்  சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். 
   சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புங்கமடுவு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவரது மனைவி மகேஷ்வரி (32).  கோவிந்தராஜ் வாழப்பாடியில் புகைப்பட நிலையம் (போட்டோ ஸ்டுடியோ) வைத்துள்ளார். இவரது அண்ணன்  சண்முகராஜ் திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள மின் வாரிய துணை மின் நிலையத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.   இந்நிலையில், கோவிந்தராஜ் தனது அண்ணனைப் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் தனது மனைவியை அழைத்துக் கொண்டு சனிக்கிழமை வந்துள்ளார். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை இந்தத் தம்பதி ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில் சென்னிமலை அருகே சாவடி பகுதியில் கோவிந்தராஜ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சென்னிமலையில் இருந்து காங்கயம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் பக்கவாட்டில் மோதியது.  இதில் இருசக்கர வாகனம் தூக்கிவீசப்பட்டதில் கோவிந்தராஜ், மகேஷ்வரி ஆகிய இருவரும் பின்னால் வந்து கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.