வாகன சோதனை: ரூ.10 ஆயிரம் அபராதம்
வெள்ளக்கோவில் பகுதியில் போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையின்போது அபராதமாக ரூ. 10 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
வெள்ளக்கோவில் பகுதியில் போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையின்போது அபராதமாக ரூ. 10 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நகரப் பகுதிகள், முத்தூர், ஓலப்பாளையம் போன்ற இடங்களில் காவல் ஆய்வாளர் மு.ஜெயபாலன் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கடந்த மூன்று தினங்களாக போலீஸார் அவ்வப்போது வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று இல்லாதது, தலைக்கவசம் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, அதிவேகம் உள்ளிட்ட குற்றங்களுக்காக 80 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.