முகப்பு
திருப்பூர்

இளம் கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்த நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

இளம் கலைஞர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்த நிதி உதவி செய்யும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 மார்ச், 2018 at 8:48 AM
பகிர்:

இளம் கலைஞர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்த நிதி உதவி செய்யும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:
   இளம் கலைஞர்களுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்த நிதி உதவி செய்தல், தன்னார்வ கலை நிறுவனங்களின் வாயிலாக இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தின் கீழ் பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, கதாகாலட்சேபம், நாகசுரம், தனி வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின், கிதார்,  சாக்ஸபோன், கிளாரினெட் ஆகிய இசைக் கருவிக் கலைஞர்களுக்கும், பக்கவாத்தியங்களான வயலின், மிருதங்கம், கஞ்சிரா, கடம், முகர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த கலைஞர்களுக்கும் கலைநிகழ்ச்சிகள் நடத்திட நிதி உதவி வழங்கப்படுகிறது.
   இதற்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். மேடையில் தனித்து நிகழ்ச்சி நடத்தும் அனுபவம் மிக்கவராக இருத்தல் வேண்டும். ஏற்கெனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களுக்கு மீண்டும் அதே பிரிவின் கீழ் நிகழ்ச்சி நடத்திட வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது.
விண்ணப்பங்களை,  உறுப்பினர் மற்றும் செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி,  பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600 028 என்ற முகவரிக்கு ஏப்ரல் 4-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.