முகப்பு
திருப்பூர்

பல்லடம், பொங்கலூரில் 31-இல் மின் தடை

பல்லடம் துணை மின்நிலையத்தில் வரும் 31ஆம் தேதி (சனிக்கிழமை ) மாதாந்திரப் பாராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்

Updated On : 29 மார்ச், 2018 at 8:44 AM
பகிர்:

பல்லடம் துணை மின்நிலையத்தில் வரும் 31ஆம் தேதி (சனிக்கிழமை ) மாதாந்திரப் பாராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை செட்டிபாளையம், சிடிசி காலனி பகுதிகள், மின் நகர், சின்னூர், அம்மாபாளையம், ராசாகவுண்டம்பாளையம், மாணிக்காபுரம் சாலை, மாணிக்காபுரம், மேற்கு பல்லடம், கோவை சாலை, ப.வடுகபாளையம், பனப்பாளையம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் எம்.ராஜாமணி தெரிவித்துள்ளார்.  
பொங்கலூரில்...: பொங்கலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் 31ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.
 மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்... பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாய்க்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிகாளிபாளையம், கண்டியன்கோயில், தெற்கு அவிநாசிபாளையம், உகாயனூர், என்.என்.புதூர், வடக்கு அவிநாசிபாளையம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.