திருப்பூர்

ஊர் பொது மக்கள் சார்பில் அரசுப் பள்ளிக்கு நூலகம்

DIN

ஊர் பொது மக்கள் சார்பில் அமைக்கப்பட்ட நூலகம் வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
 இப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அனைத்து வகுப்புகளுக்கும் மின்விசிறி, மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனி இருக்கை, கணினி வழிக் கற்றல், நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன. மேலும், தமிழ் வழி மற்றும் ஆங்கில வழிக் கல்வியும் உள்ளது. 
 இப்பள்ளிக்குத் தேவையான பல்வேறு வசதிகள் அரசு உதவியுடன் தனியார் நன்கொடை மூலமாகச் செய்யப்பட்டுள்ளது. இங்கு கற்கும் குழந்தைகளுக்கு நூலகம் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என அறிந்த ஊர்மக்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.  வெளிநாடு வாழ் இந்தியர் எஸ்.மணிவேல் வழங்கிய ரூ. 1 லட்சம் நிதியுடன் சேர்த்து பள்ளியில் ஏராளமான புத்தககங்களுடன் நூலகம் அமைக்கப்பட்டது. மேலும், சிவநாதபுரம் மேற்குத் தோட்டம் சிவகுமார் வழங்கிய ரூ.22 ஆயிரம் நிதியில் பள்ளிக்குத் தேவையான ஒலி அமைப்புகள் செய்யப்பட்டன.  இதன் திறப்பு விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் கி.பாலசிவகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் என்.ராஜேந்திரன் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT