திருப்பூர்

நேஷனல் பிரீமியர் கபடி லீக் போட்டி திருப்பூரில் ஜனவரி 26இல் தொடக்கம்

DIN

நேஷனல் பிரீமியர் கபடி லீக் போட்டி 2019 ஜனவரி 26ஆம் தேதி முதல் திருப்பூரில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் பாலசுப்பிரமணியம், தலைவர் ரத்தினசாமி, செயலாளர் முத்துசாமி, பொருளாளர் சென்னியப்பன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
புதிய கபடி கழகத்தின் தேசிய சம்மேளனம், "டி' ஸ்போர்ட்ஸ் ஆகியன இணைந்து நடத்தும் நேஷனல் பிரீமியர் கபடி லீக் போட்டி 2019 ஜனவரி 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில், சென்னை சீட்டாஸ், பெங்களூர் புல்ஸ், டெல்லி டுமார்ஸ், தெலங்கானா புல்ஸ், பாட்னா பேந்தர்ஸ், 
ஹரியானா அரிகேன்ஸ், கொல்கத்தா டைகர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 
இதில், உலக அளவில் விளையாட்டு வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. மொத்தம் ஆயிரம் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு நாள் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். "டி' ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்கவரி சேனல் மூலமாக உலகம் முழுவதும் 62 போட்டி ஆட்டங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. 
அனைத்து கபடி வீரர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் h‌t‌t‌p://​c‌p.‌n‌e‌w‌k​a​b​a‌d‌d‌i.‌o‌r‌g/‌r‌e‌g‌i‌s‌t‌e‌r  எனும் இணையதளத்தில் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT