முகப்பு
திருப்பூர்

ஆதிபராசக்தி பக்தர்கள் கஞ்சிக் கலய ஊர்வலம்

வெள்ளக்கோவிலில் ஆதிபராசக்தி பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை கஞ்சிக் கலய ஊர்வலம் சென்றனர்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:37 AM
பகிர்:

வெள்ளக்கோவிலில் ஆதிபராசக்தி பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை கஞ்சிக் கலய ஊர்வலம் சென்றனர்.
 வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலை, திருவள்ளுவர் நகர், ஆதிபராசக்தி கோயிலில் இருந்து செவ்வாடை அணிந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சிக் கலயம் ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டனர். புதிய பேருந்து நிலையம், முத்தூர் சாலை, தாராபுரம் சாலை வழியாக சிவநாதபுரத்தில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம் வரை ஊர்வலம் நடைபெற்றது.
 பின்னர், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதமாக கஞ்சி வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.